யாதும் ஊரே! யாவரும் கேளீர் -
1948 மாசிமாதம் 4ம் திகதி
அன்று சுதந்திர வேட்கையை நம் இலங்கை திருநாடு நம் முன்னோர்வழி முயற்சியால் பெற்றெடுத்தது.
அன்று தொட்டு இன்றுவரை அதன் நிமிர்த்தமே நாம் அனைவரும் பயனப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
காலநித்துவ
ஆட்சியிலிருந்து விடுபட நம் மூவின தலைவர்களாக கருதப்பட்ட D.S சேனநாயக்க,
சேர் பொன் ராமநாதன், அறிஞர் M.C சித்திலப்பை, போன்ற தலைவர்கள் வழியிலாக ஒற்றுமையுடநான
முயற்சியாலும் அர்ப்பனிப்புடனான செயற்பாடுகளினாழும் ஒருமித்த கொள்கையினாலும் நாம் காலநித்துவத்திலிருந்து
விடுபட்டு சுதந்திர வேட்கையை அடைந்துள்ளோம். அவ்வாறு பாடுபட்ட
இன்னும் பல முன்னோர்களின் இறப்பில் தான் நாம் நம் வாழ்க்கையை இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இச் சரித்திரம் எட்டப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.
எட்டப்பட்ட இச் சரித்திரம் யாவரும் அறிந்தத ஒன்றாகும்!
முழுமையான சுதந்திரம்
என்பது உலகிற்குப் புதுவது ஆனால் அடிமைத்தனம் ஒன்றும் உலகிற்குப் புதுவதன்று. ஆதலால் எம் நாடும் அதற்கு விதிவிலக்கு அல்லாமல் அமைந்து விட இயலாது.
நாம் இன்றளவும் ஒருவகையில் அன்நிய தேசத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவே
வாழ்ந்துவருகிறோம். அவர்கள் வெளியிடும் உணவு, உடை, ஆடம்பரக் கலாச்சாரம், தொழிநுட்பக்
கருவிகளின் வழி வேடிக்கையாக பொழுதைக் களித்தல், போதைவஸ்துப் பாவனை,
போன்றவற்றிற்கு அடிமையாகியும் அவற்றை முறைதவறியும் பயன்படுத்திவருகிறோம்.
இறக்குமதிப் பன்டங்களை தவிர்க்க வேண்டும் என்பது எனது வாதம் அல்ல.
அவற்றை முறையறிந்து முறையாகப் பயன்படுத்தி நம் முன்னேற்றத்திற்கு ஒரு
பக்க பலமாக அவற்றை அமைந்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல் தவறான வழிக்கு வழிவகுத்து அவற்றுள்
அடிமையாகிவிடக்கூடாது என்பதே என் வாதம்.
மேலும் நான்கு
பக்கங்களும் கடலால் சூலப்பட்ட தீவின் பிரசைகளாக விளங்கும் நாம் நம் மனதளவிலும் அடிமைப்பட்டவர்களாகவே
அல்லது குறிகிய மனப்பாங்கு உடையவர்களகெவே காணப்படுகிறோம். அதாவது பிறரை வஞ்சித்தல், செய்நன்றி மறத்தல்,
பெரியோரை அவதூறு செய்தல், பிறர் வளர்ச்சியை கேலிசெய்தல்,
தீய நடத்தைகளில் ஈடுபடல் போன்ற இன்னோரன்ன பளக்கங்களே அவையாகும்.
இவற்றை விடுத்து நல்ல சிந்தனைகளுக்கும், நற்பளக்க
வளக்கங்களுக்கும் மனதை அடிமையாய் வைத்திருப்பதே சாலச்சிறந்ததாகும். இவ்வாறான நற்பண்புகளும் பலக்கவலக்கங்களுமே நம் வாழ்வின் இம்மையிலும் மறுமையிலும்
பெருந் துனணயாய் வந்து உதவும். எனவே அவற்றை இன்றே சிறமேற்கொண்டு
செய்ய ஆரம்பிப்போமாக.
மேற்கூறியவாறான
மனோபாவங்களும் செயற்பாடுகளும் ஏனைய நாடுகளிடையே இல்லாமலில்லை.ஆனால் அவ் நாட்டவர்களிடையே இவை குறைவாகவே உள்ளது.மேலும்
அவர்கள் ஓர் தேசியத்தின்பால் ஈர்ப்புள்ளவர்களாகவும் உள்ளமையினாலே தான் தம் நாட்டின்
முன்னேற்றத்தை ஒருமித்த தொனிப்பொருளில் சிந்தித்து அதன்பால் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்
அதனால் தான் அவர்களால் உலகப் போட்டியில் முன்னணியில் பல சாதனைகளை படைக்க முடிந்தள்ளது.
சுதந்திர வேட்கையை கொண்டாடும் இவ் இனிய நன்னாளில் குற்றச்சாட்டை முன்வைப்பதாக
என் கருத்துக்கள் அமையப்பெற்றதாக என்னினால் தயவுகூர்ந்து என்னை மன்னிக்கவும்.
பிரச்சினைகள் இனங்காணப்பட்டால் தான் தீர்வுகளை அடைய நாம் எத்தனிப்போம்
என்பதனாலேதான் என்பேச்சை இவ்வாறு அமைத்துக் கொண்டேன்.
எனவே முன்னோர்களின்
தியாக விதையில் துளிர்த்த நாம் அவர்கள் காட்டிய நல்வழியில் நம்மை நாமே வழிநடத்தியும்
நம் அடுத்த தலைமுறையை நல்ல வழியில் ஆற்றுப்படுத்தி சிறந்த தலைவர்களாக அவர்களையும் உருவாக்கி
தேசத்தின் கரங்களில் ஒப்படைப்பதும், அனைவரையும் இலங்கையர் என்ற ஓர் இனத் தூண்டுதளால் ஒன்றினணப்பதும் இன்றைய முகிழ்நிலை
ஆசிரியர்களாக விளங்கும் எமது நாளைய தலையாய கடமையாகும்.
யாதும்
ஊரே!
யாவரும் கேளீர்
யாதும் ஊரே! யாவரும் கேளீர் -
Reviewed by IT Park
on
December 20, 2018
Rating:

No comments